Friday 9 December 2011

புகைமூட்டம்


கனவுகள் திறக்கிறாய் தேவதை
பல கதைகுளும் பேசினால் தாரகை
எகிறி குதிக்கிற மீன் குளம்
கல் எரிந்து போன இதய கைகள் !
மான் குட்டி தாவல்
மயில் இறகு வருடல்
குயில் குடில் வெப்பம்
முதல் மழை சப்தம்

சுவை அறிய துடிக்கும் தேன்
பனி படர்ந்த புல் வெளி
சிவந்து திரியும் தாமரை முகம்
சிலிர்த்து நிற்கும் மிதமான சூடு

கொடியில் அரும்பும் மொட்கள்
கொலை செய்யாமல் கற்கும் கருணை
தாயின் தொப்புள்கொடி உறவு
அதிகாலை விடியலின் அழகு

மடியில் படற்கின்ற மேக சாடல்
ரோமங்களில் உறுத்தும் புடைப்பு
சந்திக்க காத்திருக்கும் கண்கள்
தாறுமாறாய் ஓடும் உயிர் மூச்சு

வடித்து வட்டமிடும் புன்னகை
இழுத்து கொண்டாடும் உற்சாகம்
சகட்டு மேனி  திகைப்பு
எதையும் சந்திக்கும் துணிவு

 கற்க துடிக்கும் விடா முயற்சி
களவு  போயும் மறுக்கும்  மரபு
திசைகள் அறியா பறவை
இதய துடிப்பில் ஆடும் பொம்மை

மெழுகாய் உதிரும் கோணம்
பறக்கவே யோசிக்கும் தேகம்
எதையும் மறைக்கும் ஞானம்

தெரிந்தே தவறும்
பிள்ளை மனம்
சுவடுகள் வைக்க காத்து இருந்து
ஐம்புலன்கள் கண்டு எடுத்த
செல்ல குழந்தை “ காதல்”








Wednesday 19 October 2011

நினைவகம்



தலையை மெல்லக்கோதி

நாயும் நரியும்

சண்டை பிடித்ததாய்

கதைக்கேட்டு

என் சுட்டி

தனத்தின் அளவை

முகம் நூர்ந்து

வரவேற்று,


நெஞ்சாகூட்டின் சூட்டை

அமிலம் தேய்த்து

பிஞ்சு விரலில்

சொடுக்கு விட்டு

மொட்டை மாடி நிலாவில்

நட்சத்திரத்தை எண்ணிவிட்டு,


கொட்டாவி விட்டு

உறங்கியாதாய்

என் தாய்

வயதானதும் மொழிகிறாள்

என் மழலைக்காலம்..................

Friday 14 October 2011

நாக்கு துருத்தி ..........






நானும் நீயும்

கரைந்து கொண்டு இருக்கிறோம்

எச்சில் வழிய ஒரே பாதையில்
நடந்து கொண்டு இருக்கிறோம்
என்ன செய்ய
எனக்கு நரைத்து உதிர்ந்து விட்டது
உனக்கு துளிர் விட யாரோ
மண்டையை வளித்து விட்டான்
மொட்டை குழந்தையும்
வழுக்கை தாத்தாவும்
ஒற்றை ரூபாய் ஐஸ் கிரீம் தேடி.............

Friday 30 September 2011

ஓட்டம்



என் நக கண்ணில்
ஒளியுது செவ்வானம்
ஆண் மரத்தை இழுத்து
விழி தரையில் சாய்த்து
வின்மினிபுளிதி  கொண்டு
சிரிக்கிறதே புன்னகை ..................

உன் வெட்கம்
வெட்ட வெளியை
எட்டி பார்க்க ,

பாத சுவடுகள்
வீடு மறந்து திரிகிறதே இதயப்பை ...........
விடை சொல்லு பால் மழையே
அதிர்ச்சியான இன்பங்கள்
இன்னும் எத்தனை காலங்கள்........

Sunday 5 June 2011

யாட்கை

கரங்களே இல்லாத
முட்போர்வையில் சிக்கி தவிக்கிறது
இன்று பிறந்துவிட்ட மைனாகுஞ்சி .
அந்த தாய் குருவியின்
சிறகுகளின் வேகத்தில்
கண் விழித்து
காணொளி காட்சியை
கட்டுடைதைத்தது
இன்றைய மௌன  உலகம் !

தான் படுதிரிந்த
வைக்கோல் சூட்டை விட
சூரிய கதிர்களின் பாய்ச்சல்
சற்று விதமான
புது சுகத்தை அள்ளி
பருகி கொண்டு இருந்தது ..

மரத்தில் ஊரும எறும்புக்கு கூட
இது இறை என்றால்
மிகையாகது!

மஞ்சள் வெயிலில்

இலையுதிர் காலம்
மரத்தின் சுபிச்சத்தை
வேரோடு அறுத்துவிட்டு
முகில்களை வரவேற்கும்
சருகளை கீழ செல்
என்றே கட்டளையிட்டுருந்தது !

ஒரு சில வினாடிகளில்
குட்டி மைனாவின்
மூக்கின் ரகசியத்தை
சருகுகளும் உரசியே
கண்டுக்கொண்டன!

பாதாள   உலகின்
நிரந்தர பசி யாட்கையில்
சிறகுகள் ஓடியும்
முன்னரே
இரு சொட்டு குருதி ஓட்டத்தில்
ஒடிந்து விழுந்த
கூர் குச்சி குற்றி
விபோச்சனம் பெற்றது

யார் செய்த குற்றம்?











பால் பறவை


நீ சோகமாய் இருக்கிறாய்
என்றே
நேற்றைய கனவுக்கு பின்
ஈரமான தலையணை கண்கள்
பார்த்து கொண்டு இருக்கிறது ................

கண்ணீர் பாலும்
வடித்து கொண்டு இருந்தது!

உன் இரு
கைகள் தேடுகிறேன் வழியில்
உன் இதயம்
காதல் கனம் தாங்காமல்
சுகமான சுமை இதுவென்று
தூரத்தில் இருந்தும்
வழி தெரியாத பறவை போல்
சிலாத்து கொண்டு இருக்கிறது !

ஒரு கல்லினால்
வட்டமிடும் சுழல்களை  போல்
இந்த புருவங்களின் பசி யார்த்த
நல்ல காட்சி திரையோடு
உன் இதயப்பை நன்றாக உருவகபடுத்தி
கனவுலகின் விழி நுனியில்
தேக்கிவைத்துக்கொள் !

பிறந்து விட்ட கற்பனைகள்
எல்லாம்
பிறரிடம் சரியாக சேர்வதுமில்லை
கண்டு விட்ட கண்களும்
மீண்டும் பார்த்து விட சோர்வதும் இல்லை !

உன் சிரிப்பிற்காக நான் காயப்பட
காத்திருக்கிறேன்
இதோ இந்த கனவு வாசலில் ...
மனம் பிறழா  
கால தடங்களை வரவேற்கிறேன் ...
எங்கே இருக்கிறாய்
உள்ளம உணரும்
அதிர்வு நடனம்
காதொரங்களில் ......................




Thursday 2 June 2011

மஞ்சள் நேரங்கள்




உன்னை தூரத்திலே பார்த்து
பழகிவிட்ட கண்களுக்கு கூட
வியப்பாய் இருந்திருக்கும் ....
கண்களுக்குள் அழகு
பொறாமை போட்டி
உதிர்த்து விட்டது போல ...................

நீ சபதமாய் கோபித்து
கொள்ளும் முனகல் எல்லாம்
சேகரித்தால் அன்பின்
அர்த்தனாலங்களில் அதிர்வு
ஓசை மட்டும் ரீங்காரமிடும்.....

நீ ஐய்யோ அட பாவி
என்ற சினுகல்களில்
இந்த சென்மத்தின்
பாவங்கள் எல்லாம்
புதைந்தோடிவிடும் ...............

விரலின் இருக்கங்களில்
துருவங்கள் மாறுவதுப்போல்
இமயம் தொட்டு திரும்புவது
இருவரின் வெள்ளை வான் பறவை
ரகசிய புன்னகை .............

காலத்திடம் கோபம் கொண்டு
மீள  முடியாமல்
வழி இல்லா ஒற்றையடி பாதயாய்
முடிந்து விடுகிறது நம் நடைப்பயணம் .................

நீ திரும்பி பார்த்து விட்டாலே
குதூகலத்தில் மிதக்கும்
பூனை நெஞ்சம் ..
திருட்டு தனமாய் இன்னும்
பத்து நாழிகை கடத்தி விட
சொல்லி வழியும் வார்த்தை
அப்புறம் வேற என்ன .......................





Monday 25 April 2011

அடுக்குத்தொடர்


அலைகடலென தாவி வரும்
ஆறடி அறிவே
அன்பில் தத்தளிக்கும்
மழையின் மாங்குயிலே
பொன்மேக சிரிப்பே
பூங்காவன சிலிர் பில்லே
சின்ன சிறு குருவியே

சிற்றிடை நதியே
வாதம் செய்து வார்த்தைகளில்
வதம் செய்ய துடித்து  
பின்தொடரும்  அருவியே
தென்னை ஒளியே
தேன்மதுர சுவை பேச்சே
அடங்காமல் கதிர் வீசும் நெற்றியே
சாலையிடும் பாதமே
கோலமிடும் வெட்கமே
நளினத்தின் சுளியே
நாதத்தின் மொழியே

தேவதாயின் மகளே
தேடலின் பசியில் ஒளிந்து
தீராத ஆசையில் விழைந்து
எங்கே மூழ்கிவிட்டாய்
தூக்கம் கலைத்து
விழி வாசிப்பாயா
இந்த உலகம் கவர்ச்சியாய்
உடை  அணிந்து விட்டது
பார்த்து விட்டு போ ............



Monday 18 April 2011

வா வா வெண்மதியே


நீ உம் என்ற
வினாடிகளில் விடை தேடிய
பறவை தான்
இன்று இளப்பார
தோள்களில் துள்ளி விளையாடி
கொண்டு இருக்கிறது !

நீ இல்லை என்று
சிணுங்கிய கண் அசைவின்
மறு கணங்கள் தான்
ஆகாயத்தின் ஒரு துளியை
எதிர்நோக்கும் சுபிச்சம்  
என்கிறது இந்த
வெட்கப்பட்ட பொன் சிரிப்பு...........

பொய் என்றாலும்
மெய் என்றாலும்
எனக்கே தெரியாமல்
என்னுள் வார்தைக்களாய்
முளைத்து உதிர்ந்து விட்டாய்
நினைவுக்கு மணிகட்ட
உன் நிழலிலே மிதந்து
அரியணை தேடி
பால் ஒளியின்
சன்னல்  ஓர வேடிக்கையாளன்
வெண்மதியே ...

மறைமுகமாய் கனவுகள்
இன்று உன்னுடன் நின்று இருக்கும்
அந்த முனுகளில் ஆயிரம் ஆசைகள்
சின்ன சிறு குழந்தையாய் பிறந்து இருக்கும்
முடிந்தால் நெஞ்சிலே வைத்துகொள்
யாரிடமும் சொல்லாத
கனவு காதல்
ஒரு தலை இரவில்
தலையணை பிரிவிகளுடன்................

Thursday 17 March 2011

வெற்றியாளன்



சூழல் சட்டைகளை
உறித்துவிடும் சந்தர்ப்பவாதி
சர்ப்பங்கள் நாம் தான்
இது பழக்கமாய் போனதால்
நெருங்கும்
நன் தீமை கீரிகளின்
பற்களுக்கு பயந்து
உள்ளூரும் மாணிக்க கற்களை
ஒளித்தே நகர்கிறோம் ..........

அவ்வப்போது காணாமல் போய்
திரும்பும் கானல் நீர்
இதய பையின்
மைய பொருளானதால்
நம்பிக்கை ஒளியில்
எண்ணங்கள்
சடை முடிக்கிறது .......

இது தேவை என்றும்
இல்லை என்றும்
உள்ளார நடைபோடும் சுவாச
காற்றுக்கு மட்டும் தெரியும் போல

இதயம் விரிந்தால்
மென்மையின் அருகில்
பள்ளி கொள்கிறது
இதயம் அகண்டால்
வன்மையின் சுவட்டில்
கால் பதிக்கிறது .......

அது தெரிந்தும்
ஆசைகளை உண்ணும்
காகித உடல்
வெளிர்ந்த சோலியாய்
பவள முத்துக்களான
சுற்றத்துடன்
கரை சேர்கிறது

இயற்கையின் நீதியில்
பறந்து திரியும்
ஆயிரம் முடி விரிசல்களில்
ஈரமான சிலவும்
உலர்ந்த பலவும்
வெடித்து வெளிவந்த
இதயக்கூடு சிம்மாசனத்தின்
அரசன் வெற்றியாளன் .............